சன் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அதன்பின் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதனை தொடர்நது, தமிழ் தெலுங்கு மலையாளம் என அடுக்கடுக்காக பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது வழங்கி கௌரவித்தது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.
படப்பிடிப்புகள் கொரொனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை தங்கள் கையில் வைத்துக் கொள்வதற்காக, சோஷுயல் மீடியாக்களை கையில் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட தற்போதைய புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஒரு மாதிரியான பார்வையில் விழவைத்துள்ளது. அதிலும் ஒரு ரசிகர், என்ன ஒரே மூடா இருக்கீங்க போல!! என்று ஹஸ்கி டோன்னில் கேட்க, இன்னும் பலர் ஏகப்பட்ட ஹாட்டான கமெண்ட்களை போட்டு துளைத்துள்ளனர்.
