cinema news
குதிரையை கழுதையாக பார்க்கும் சமூகம்…வருத்தப்பட்ட அபிராமி… அப்படி என்ன தான் நடந்துச்சி?…
“விருமாண்டி” படத்தின் மூலம் தமிழில் மிக பிரபலம் அடைந்தவர் நடிகை அபிராமி. கமல்ஹாசனும் இவரும் இணைந்து நடித்த ‘அந்த’ காட்சிகள் இருவரும் நிஜமான கணவன், மனைவியா? என்று கேட்கக்கூடிய அளவிலேயே அமைந்தது. “விருமாண்டி” படத்திற்குப் பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகமாக வரும் என நினைத்திருந்த அபிராமியின் எண்ணம் ஈடேறவில்லை.
பிரபு தேவா, பிரபுவுடன் “சார்லி – சாப்ளின்” படத்திலும், பிரபுவுக்கு ஜோடியாக “மிடில் கிளாஸ் மாதவன்” படத்திலும் நடித்திருந்தார். சரத்குமாருடன் “தோஸ்த்”, “சமுத்திரம்” படங்களிலும், மம்மூட்டியுடன் “கார்மேகம்” படத்திலும் கதாநாயகியாக இனைந்தார். ‘அக்சன்- கிங்’ அர்ஜூனுடன் “வானவில்” படம்.
இப்படி பெரிய நடிகர்களுடன் நடித்த அபிராமி இது போன்ற வாய்ப்புகள் இனி அதிகமாக வந்தடையும் என எதிர்பார்த்திருப்பார். அதன் பிறகு வாய்ப்புகள் மெதுவாக குறைய துவங்கியது. கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருந்தாலும் குடும்பப்பாங்கான படங்களிலேயே அதிகமாக நடித்தார்.
இப்படிப்பட்ட நேரத்தில் தான் கமல்ஹாசனுடைய படங்களில் பின்னணி குரல் கொடுத்து ‘டப்பிங்’ பேசி வந்தார். “விருமாண்டி” படத்தில் நடித்த போது அபிராமியின் வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்ததால் தனது படங்களில் ‘டப்பிங்’ பேச அழைத்ததாக கமல்ஹாசனே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.
அபிராமி சமீபத்தில் சமூகத்தின் மீதான ஒரு ஆதங்கத்தை வருத்ததோடு பதிவு செய்துள்ளார். சினிமாவில் தன்னுடைய உயரத்தை வைத்து பலரும் கேலி, கிண்டல் செய்தார்களாம். கதாநாயகி இப்படி உயரமாக இருந்தால், கதாநாயகனை எப்படி தேடுவது? என்கிற வரைக்கும் கிண்டல் பேச்சுக்கள் சென்றதாம்.
அதோடு மட்டும் நிற்காமல் இவருடைய தாடை சற்று நீளமாக இருப்பது கூட கேலியாக பேசப்பட்டதாம். சிறுவயதாக இருக்கும் பொழுது சிலர் அபிராமியின் கன்னத்தை கிள்ளுயதோடு மட்டுமல்லாமல், இவருடைய தாடையை பிடித்து இழுத்து, இழுத்து கொஞ்சினார்களாம். இதனாலேயே இவருக்கு நீளமாகி போனதாம் தாடை. ஒருவரிடம் உள்ள திறமையை பாராமல் ஒருவருடைய உருவத்தை வைத்து கேலி செய்து, அதை பேசும் பொருளாக்கும் ஒரு அவல நிலை இருப்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.