Actress Aathmika
Actress Aathmika

அந்த பாட்டு ராசிகண்ணாக்கு மட்டும் தான், கடுப்பான ஆத்மிகா ரசிகர் போட்ட பதில் பதிவு!!

ஹிப்பாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இவர் தனது முதல் படத்திலே ரசிகர்களிடையே நற்பெயரும், புகழையும் பெற்றார். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் என்ற திரில்லர் படத்தில் நடித்துக் கொண்டு வருகின்றார்.

ஆத்மிகா எப்போதும் தனது புடைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். ஆனால் இவர் தற்போது வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதன்படி, நடிகை ஆத்மிகா ஒரு போட்டோவை பதிவிட, அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் அயோகியா படத்தில் நடிகர் விஷால்-ராசி கண்ணா ரோமான்ஸ் பாடலான “கண்ணே கண்ணே உன்னா தூக்கி கான தூரம் போகாட்டா” என்று ரோமண்டிக்காக கமெண்டஸ் போட, அதை பார்த்த ராசி கண்ணா ரசிகர் ஒருவர் ”ஹேய் அந்தப் பாடல் ராசி கண்ணாக்கு மட்டும் தான்” என்று பதில் கமெண்ட்ஸ் பதிவிட, அதற்கு கடுப்பான ஆத்மிகா ரசிகர், “அப்படியெல்லாம் ஒரு ரூல் இல்ல” என்று பதில் பதிவிட்டு வெளுத்து வாங்கியுள்ளார்.

Aathmika fans in argument
Aathmika fans in argument