cinema news
காதல் தோல்வி – சீரியல் நடிகை தற்கொலை!
தெலுங்கு சீரியல் நடிகை நாகா ஜான்சி நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ‘பவித்ரா பந்தம்’ என்கிற சீரியலில் நடித்து பிரபலமானவர் நாகா ஜான்சி. இவர் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலணியில் வசித்து வருகிறார். நேற்று இரவு 9 மணியளவில் அவர் சீலிங் பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
காதல் தோல்வி காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சூர்யா என்ற வாலிபரை அவர் காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவீட்டிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அவரது காதலர் சூர்யாவும் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.