தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த கதாநாயகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘ஹிப்-ஆப் தமிழா’ஆதி தன்னுடைய முதல் படமான “மீசைய முறுக்கு”ல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
இசையமைப்பாளராக இருந்தவர் திடீரென கதாநாயகனாக மாறினார். “மீசைய முறுக்கு” இவரது சினிமா கேரியரை முறுக்கி நிமிர வைத்த படம். ரவிகிருஷ்ணா “7 ஜி ரெயின்போ காலனி” படத்தில் அறிமுகமானார். படத்தில் இவருடைய யதார்த்தமான நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது.
“ஜெயம்” ரவி என அடைமொழியோடு அழைக்கப்பட்டது அவரது முதல் பட வெற்றிக்கு பிறகே . சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்து கதாநாயகன் ஆனவர் ரவி. இவருடைய முதல் படமான “ஜெயம்” இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

அதன் பிறகு தான் இவர் “ஜெயம்” ரவி என அழைக்கப்பட்டார். சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்பதை மாற்றி “பருத்திவீரன்” கார்த்தி என பேசப்படும் அளவிற்கு மெகா ஹிட் படமாக மாறியது கார்த்தியின் முதல் படமான “பருத்திவீரன்”.

“சக்சஸ்” வசனம் அவரின் முதல் வசனமாக இயற்கையாகவே அமைந்தது. அந்த வசனமே அவர் வாழ்க்கையை மாற்றிய மந்திரச்சொல்லாக மாறியது. “பராசக்தி” படத்தில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் அது.
இவரைப் போல இன்னொரு நடிகர் பிறந்த தான் வர வேண்டும் என சொல்லும் அளவில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி சூப்பர் டூப்பர் ஹிட் ஆக, தனது முதல் படத்தையே வெற்றிப்படமாக கொடுத்த கதாநாயகர்கள் மத்தியல் சிவாஜி மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார்.