16vayathinilae
16vayathinilae

காணாமல் போன மயில் டாக்டர்?…முதல் மரியாதையிருந்தும் வேற இடத்துக்கு போன பிரபலம்!…..

சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பது மிக சாதாரணமான ஒரு விஷயம் கிடையாது. நடிக்கும் படங்களில் பல தோல்விகளாக அமைந்தாலும் மீண்டும் , மீண்டும் தங்களது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாளும் தொடர்ச்சியாக உழைத்து தங்களை வளர்த்துக் கொண்டு மிகப்பெரிய இடத்துக்கு வந்த நடிகர்கள் பலரும் உண்டு.

பல ஆண்டுகள் கழித்து வெற்றி கிடைத்து பரீட்சயமான நடிகர்களும் உண்டு. முதல் படமே சூப்பர் ஹிட் ஆகி அதன் பிறகு காணாமல் போன கலைஞர்களும் உண்டு…

” 16 வயதினிலே” படத்தில் ஸ்ரீதேவியை சுற்றி வந்து, அவருக்கு ரூட் போடும் டாக்டராக நடித்திருந்தவர் சத்தியஜித் . ‘மயில்’ ,’மயில்’ என்று ஸ்ரீதேவி படத்தில் அழைத்தது மிக பிரபலமானது.

அதன் பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இப்பொழுது வேறு துறையில் பணியாற்றி வருகிறார். “நாம் பிறந்த மண்” படமே இவரது அறிமுக படமாகும்.

kaathal oviyam
kaathal oviyam

பாரதிராஜாவின் வெற்றி படங்களில் ஒன்றான “காதல் ஓவியம்” படத்தில் கண் பார்வையற்ற வேடத்தில் நடித்திருந்தவர் கண்ணன். அந்த படம் மிகப்பெரிய சூப்பர், டூப்பர் ஹிட். ஆனாலும் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால் வெளிநாட்டில் வேறு பணியில் தஞ்சமடைந்தார்.

muthal mariyathai
muthal mariyathai

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் அண்ணன் மகன் தீபன். 80 – 90 கால ரசிகர்கள் இவரை நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள். பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கனேசன், ராதா, வடிவுக்கரசி நடித்த “முதல் மரியாதை” படத்தில் வரும் ‘அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்’ பாடலில் நடித்தவர் தீபன்.

கலை உலகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்ப பின்னனி இருந்தாலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் போனது. தீபன் கலை உலகிற்கு அறவே சம்மந்தம் இல்லாத வேறு துறையில் பணியாற்றி வருகிறார்.