Vishnu Vishal-Jwala
Vishnu Vishal-Jwala

சமூக விலகல் மிகவும் முக்கியம் – காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர்

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடிவதில்லை. இந்நிலையில், நடிகர் ஒருவர் தன் காதலியை பார்க்க முடியாமல் சோகத்தில் உள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் திருமணமாகி பின்பு சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது மனைவியை விவாகரத்து செய்த கையோடு அவருக்கு இன்னொரு நடிகையோடு தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவரே தனக்கு காதலி இருப்பதாக சூசகமான முறையில் போட்டோக்களை எடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டிருந்தார். அந்த போட்டோவில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலாவை காதலிக்கிறார் என்று மறைமுகமாக சொல்வது போல் மிகவும் நெருக்கமாக இருந்தது. அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்களுக்கு நேரடியாக விஷ்ணு விஷால் காதலில் இருப்பது தெரிந்தது.

இப்போதைய சூழலில் தனது காதலனை காணமுடியாத ஜுவாலா, தனது ட்விட்டர் பக்கத்தில் “மிஸ்ஸிங் பூ” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் விஷ்ணு விஷால் அதெல்லாம் பரவாயில்லை இப்போது சமூக விலகல் மிகவும் முக்கியமானவை, அனைவருக்காகவும் பிரார்த்திப்போம் – ஆறுதல் கூறி  பதிலளித்துள்ளார்.