தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டில் உள்ளே இருந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று அரசு சார்பு தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபாடு கொண்ட தன்னார்வ தொண்டர்களை முன்வந்து உதவலாம் என்றும் கூறியிருந்தது.
இதைத்தொடர்ந்து தன்னார்வலர்கள் பலர் உணவளித்தல், கொரோனா தூய்மைப் பணியில் ஈடுபடுதல், வீடு வீடாக சென்று காய்கறி அளித்தல் என்று மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் நடிகர் ஒருவர் கொரோனா தூய்மைப் பணியில் ஈடுபட்டு உள்ளார். களவாணி என்ற படத்தை தொடர்ந்து பல படத்தில் நடித்துக் கொண்டு வருபவர் நடிகர் விமல். இவர் இப்போது தன் சொந்த ஊரான திருச்சி அருகே பனங்கொம்பு கிராமத்தில் தனது ஊர் மக்களின் நலனுக்காக தன்னை கொரோனா தூய்மைப்பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இவரின் இந்த செயல் பல்வேறு தரப்பிலிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரைப்போல் அனைவரும் முன்வந்து இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.