தளபதி 64 அப்டேட் – அதிரடி காட்டும் தாதாவாக விஜய்

212
தளபதி 64 அப்டேட்

விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தில் விஜய் ஏற்கவுள்ள கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தில்  நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராப், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம் பற்றிய தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது. மாநகரம் படம் மூலம் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் கூறிய கதை விஜய்க்கு பிடித்து விட அப்படத்தில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படத்தில் சென்னையை கலக்கும் தாதா வேடத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என தற்போது தகவல் கசிந்துள்ளது.

பாருங்க:  இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் பட பர்ஸ்ட் லுக் வெளியானது