செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி. கே திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த என்.ஜி.கே திரைப்படம் இன்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணிக்கே சூர்யா ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன் வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் “அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்” என பதிவிட்டுள்ளர். இது சூர்யா ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.