actor sriman
actor sriman

கேமராவில் மாட்டிக்கொண்ட கொரோனா – நடிகர் சீமன் வெளியிட்ட வீடியோ!

சீனா முதல் இந்தியா வரை தன்னுடைய வேகத்தில் எந்தவித தட்டுத்தடுமாறல் இல்லாமல் தன் பலத்தை உலகளவிய மக்களுக்கு காட்டிக் கொண்டு வருகிறது கொரோனா வைரஸ். இந்த நிலையில் அனைத்து நாடுகளுமே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. இருந்தாலும் கூட, இந்த கொரோனா நோயை கட்டுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து, உயர்தர கேமராக்கள் உதவியுடன் கொரோனா வசமாக மாட்டிக் கொண்ட வீடியோவை ஜப்பான் ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. அதனை நடிகர் ஸ்ரீமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவை பார்க்கும் போதே வைரஸ் தொற்று எவ்வாறு வேகத்துடனும் வீரியத்துடனும் பரவுகின்றது என்பதை கண்குட்ட பார்க்க முடிகின்றது. எனவே, அனைவரும் வீட்டில் இருப்பதே சாலச் சிறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.