Latest News
சிம்புவுக்குன் நோ?…ரீப்ளேஸ் பண்ணிய ரெங்கநாதன்….ட்விஸ்ட் கொடுத்த இயக்குனர்?…
தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளுடன், தீர்க்கமான சிந்தனையுடன் புது,புது இயக்குனர்கள் தங்களது கற்பனையை படமாக்கி வெற்றி கண்டு தமிழ் திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறனர். “2010”ம் ஆண்டு வெளியான. “ஓ மை கடவுளே” படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. அசோக்குமார், ரித்விகா சிங் நடிப்பில் வெளிவந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்த படம் குறித்த வேலைகளையும், அதில் தீவிரத்தையும் காட்டி வருகிறார் அஸ்வந்த் மாரிமுத்து. கடந்த “2022”ம் ஆண்டு ஒரு கதையை தயார் செய்து அதனை தானே இயக்க வேண்டும் என்கிற ஆசையிலும்அதில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க நினைத்து அவரை சந்தித்து கதையை சொல்லியிருக்கிறார்.
கதை பிடித்துப்போன சிம்பு ஓ.கே. சொல்லியும் விட்டார். அதன் பிறகு அந்த படத்தினுடைய அடுத்த கட்ட நிலவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவே இல்லை. படத்திலிருந்து விலகி விட்டாரா சிம்பு?, இருவரும் இனையவே மாட்டார்களா? என்ற ஒரு குழப்பமும், கேள்வியும் நிலவி வருகிறது. ஆனால் “கோமாளி” “லவ்டுடே” படங்களின் இயக்குனரும், நாயகனுமான பிரதீப்ரெங்கனாதனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்புவிற்காக தயார் செய்த கதை பிரதீப்பிடம் சொல்லப்பட்டது என கோலிவுட் வட்டாரதில் பேசப்பட்டது. பேச்சுவார்த்தை முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் வேறு தகவல் இல்லை என்பதாலே இது போல செய்தி பரவியுள்ளதாகவும் பார்க்கப்பட்டது. அஸ்வந்த் மாரிமுத்து இது குறித்து தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது சிம்புவுக்கு சொல்லப்பட்ட கதை வேறாம். சிம்புவுடன் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஆனால்விக்னேஷ் சிவன் இயக்கும் “எல்.ஐ.சி” படத்தை முடித்த பிறகு பிரதீப்ரெங்கநாதனும், தானும் இனையப்போவதாக கூறினார். இந்த படத்தினுடைய கதை வேறு என்பதால் அதன் மீது அதிக கவனம் செலுத்திவருவாதாகவும். அதனை வெற்றி படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாதாகவும் சொல்லியிருக்கிறார்.