சினிமா பட வில்லன்கள் என்றால் முரட்டு மீசையும், கட்டு மஸ்தான உடம்பும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வந்த நேரம் அது. ஹீரோக்களுக்கு இணையாக கருதப்பட்டவர்கள் வில்லன்கள்.
ஈவு, இரக்கமற்ற சம்பவங்களை செய்தும், காட்சிகளில் சத்தமான வசனங்கள் பேசினால் தான் வில்லனாக கருதப்பட்ட காலத்தையும் தமிழ் சினிமா பார்த்துள்ளது.
மாறுபட்ட உடலமைப்போடு, பல படங்களில் மீசை இல்லாமல் தோன்றி வில்லனாக மிரட்டியவர் நடிகர் ரகுவரன். “புரியாத புதிர்”என்கின்ற திரைப்படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனரான முதல் படம்.
இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரன். இதில் நடித்த ரகுவரனுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். “சிவா” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருப்பார்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தமிழ்நாடே கண்டு அஞ்சி நடுங்கும் வில்லனாக திடீரென தனது பாதையை மாற்றி பயணிக்க ஆரம்பித்தார்.

ரஜினி டானாக நடித்த “பாட்ஷா” படம் இவரது வில்லன் நடிப்பு வாழ்க்கையில் ஒரு மைல் கல். மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தில் வந்த இவர் திரையில் மிரட்டி இருப்பார். ரஜினியுடன் இவர் நேருக்கு நேராக மோதும் காட்சிகளில் வரும் வசனங்கள் எல்லாம் கைத்தட்டல்களால் தியேட்டர்களை அலறச்செய்தது.
ஒருமுறை தனது சினிமா வாழ்க்கை குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்த ரகுவரன், நடிகனானதற்கு பதிலாக ஆடு,மாடு,கோழிகளை வாங்கி வளர்த்து, அதற்கு தேவையான விஷயங்களிலேயே ஆர்வம் காட்டி வந்திருக்கலாம்.
அது ஒரு விதமான நிம்மதியான வாழ்க்கை, மேலும் அது தான் வாழ்க்கை, நடிகன் என்ற வாழ்வில் தனக்குள் இருந்த துயரத்தை சலிப்புடன் கூறி இருந்திருக்கிறார்.











