cinema news
கொரோனா ஊரடங்கில் பார்த்திபன் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு!!
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி அதை அமேசானில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் பார்த்திபன் நடிகர் மற்றும் இயக்குனராக அறியப்பட்டதை போன்றே அவரது கவிதைத்தொகுப்பான கிறுக்கல்கள் மூலமாகவும் வாசகர்களுக்கு பழக்கமானவர். எதை செய்தாலும் வித்தியாசமாக செய்யும் பார்த்திபன் கவிதைத் தொகுப்புக்கு வைத்த பெயரே கிறுக்கல்கள்தான். இந்நிலையில் இப்போது குவாரண்டைனில் இருக்கும் அவர் 144 கவிதைகள் என்ற தொகுப்பை எழுதி அதை அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார்.
இந்த கவிதைத் தொகுப்பு பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பார்த்திபன்’ எனக்கு இந்த ஊரடங்கு சிறையாகத் தெரியவில்லை. நான் ஏற்கனவே இப்படி ஒரு வாழ்க்கையைதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்போது நான் தவற விடுகிற ஒரே விஷயம் ஜிம்முக்கு செல்வதைத்தான்’ எனக் கூறியுள்ளார்.