mrratha nsk
mrratha nsk

பழத்துக்குள்ள எப்படி வந்துச்சு பணம்?… எம் ஆர் ராதாவை அதிர வைத்த கலைவாணர்!…

தனது நகைச்சுவை மூலம் சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லி வந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். “கலைவாணர்”  என  அன்போடு அழைக்கப்பட்டர். சிரிக்கவும் வைப்பார், சிந்திக்கவும் வைப்பார் எனப்புகழப்பட்டவர்.

‘நடிகவேல்’பட்டத்தோடு வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. இவருடைய நடிப்பின் பாணியே தனி தான். யாரும் எதிர்பாராத கருத்துக்களையும், வசனங்களையும் தனது படத்தில் வைத்து முற்போக்கு சிந்தனை பற்றி பேசி அதிர வைத்தவர்.

யதாரத்தமான கருத்துகளை தனக்கே சொந்தமான நக்கல், நையாண்டியோடு வசனங்களை  பேசியிருப்பார்.அந்த காலத்திலேயே முற்போக்குவாதியகவே பார்க்கப்பட்டார் இவர்.

mrratha
mrratha

ஒருமுறை தனது சூழ்நிலையின் காரணமாக பணம் தேவைப்பட எம்.ஆர்.ராதாவோ,  என்.எஸ்.கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டு இருக்கிறார்.

அவரது தேவை என்ன என்பதை கேட்டுக் கொண்ட ‘கலைவாணரோ’ எம்.ஆர்.ராதா கையில் ஒரு ஆரஞ்சு பழத்தை கொடுத்து விட்டு இதை சாப்பிட்டுக் கொண்டே போயிட்டு வா என சொல்லி அனுப்பினாராம்.

பணம் கேட்டு வந்த தனக்கு பழத்தை கொடுத்து விட்டாரே. என்ன நடக்கிறது இங்கே என புரியாமல் தவித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா.

சரி இருந்தாலும் அவர் சொல்லிவிட்டாரே என சாப்பிடுவதற்கு பழத்தை உரித்திருக்கிறார். அப்பொழுது உள்ளே பணம் இருப்பதைக் கண்டு திகைத்துப் போனாராம் எம்.ஆர்.ராதா.

தான் செய்யும் உதவி பிறருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் குறியாக இருப்பாராம் என்.எஸ்.கே. கேட்ட பணத்தை எல்லோரும் முன்னிலையிலும் கொடுத்திருந்தால்.

அது எம்.ஆர்.ராதாவிற்கு சற்று கௌரவ குறைச்சலாக இருக்கும் என்கின்ற காரணத்தினாலே இப்படி செய்திருக்கிறார் என  பிரபல விமர்சகரும் தயாரிப்பாளருமான  சித்ரா லட்சுமணன் சொல்லியிருந்தார்.