Bigg Boss Tamil 3
60 வயதில் கட்டான உடலுடன் நாகார்ஜுனா – வைரல் புகைப்படம்
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் சமீபத்திய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் நாகார்ஜுன்னா. 70,80 மற்றும் 90 கிட்ஸ்களில் இவருக்கு ரசிகர்கள் உண்டு. தற்போதும் இவர் பிஸியாகவே நடித்து வருகிறார். இவரது மகன் நாக சைத்தன்யாவைத்தான் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் நாகார்ஜுனா நீச்சல் குளத்தில் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் 60 வயதிலும் நாகார்ஜூனா இப்படி கட்டுடலுடன் இருப்பதை கண்டு வாய் பிளந்து வருகின்றனர்.