Mirchi Siva
Mirchi Siva

“நீ ரொம்ப டீசண்டான ஆளு” கொரோனாவை வெரலவள்ல பாராட்டிய மிர்ச்சி சிவா

கொரோனா – உயிர் பலி, அச்சம், நோய் தொற்று, பொருளாதார வீழ்ச்சி என்று ஒட்டுமொத்த உலகவே தன் கட்டுப்பாட்டில் கட்டுப்படுத்தியுள்ளது.

என்னதான் உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மக்கள் எப்பொழுதும் தங்கள் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அந்த வரிசையில் இந்தியாவில் பல்துறை பிரபலங்கள் கொரோனாவை குறித்த விழிப்புணர்வுகளை தங்கள் ரசிகர்களுக்கு சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சீரியஸான விஷயங்களை கூட காமெடியால் கலந்து, காமெடியை கூட சீரியஸ்ஸாக கூறுகின்ற நடிகர் மிர்ச்சி சிவா. காமெடி மட்டுமே சார்ந்த படங்களில் நடித்து சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் கொரோனாவை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏன்? எதுக்காக? ஒருத்தன் பண்ண தப்புக்கு நாங்க எல்லாம் கஷ்ட பண்ணுமா? உன்ன பார்த்தா ரொம்ப டீசண்டா இருக்கு. உன் முகத்துல ஒரு க்யூட்டான சிரிப்பு, கியூடெனஸ் இருக்கு” என்று கொரோனாவை பாராட்டித் தள்ளி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.