Connect with us

என்ன பார்க்க வரக்கூடாது கண்டிசன் போட்ட எம்.ஜி.ஆர்!… கதிகலங்கி போன ஏ.வி.எம் சரவணன்?…

saravanan mgr

cinema news

என்ன பார்க்க வரக்கூடாது கண்டிசன் போட்ட எம்.ஜி.ஆர்!… கதிகலங்கி போன ஏ.வி.எம் சரவணன்?…

“ஏ.வி.எம்”தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனைகளை செய்த ஒன்று. இவர்களது தயாரிப்பில் நடிக்காத தமிழ் ஹீரோக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரையும் வைத்து படங்களை எடுத்து, பல இயக்குனர்களுக்கு வாழ்வும் கொடுத்துள்ளது.

“எங்க வீட்டுப் பிள்ளை” படம் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிப்பதில் குறியாக இருந்தார் ஏ.வி.எம்.சரவணன். தன் தந்தை ஏ.வி.மெய்யப்ப  செட்டியாரிடம் இதனை எப்படி சொல்வது என தயங்கி நின்றிருக்கிறார்.

தனது நண்பரும், இயக்குனருமான ஏ.சி.திரிலோக சந்தரிடம் தனது ஆசை குறித்து சொல்லியிருக்கிறார். ஒரு நாள் தனது தந்தையிடம் தைரியமாக நாம் ஏன் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கக் கூடாது? என கேட்டிருக்கிறார். அவரோ உன் இஷ்டம் என ஒப்புதல் வழங்கிவிட்டார்.

anbaevaa

anbaevaa

அப்படி வந்த படம் தான் “அன்பே வா”. பொங்கல் பண்டிகை அன்று தான் படம் வெளியாக வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினாராம் சரவணன். இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆருக்கும், ஏ.வி.எம் சரவணனுக்கும் நெருக்கமான நட்பு பிறந்ததாம்.

எம்.ஜி.ஆர். ஏதாவது படப்பிடிப்பில் இருக்கும் போது, அந்த தளத்துக்கு சென்று சந்திப்பாராம் சரவணன். ஒரு நாள் எம்.ஜி.ஆரோ நீங்கள் என்னை பார்க்க வர வேண்டும் என்றால் எனது தோட்டத்திற்கு வாருங்கள், அல்லது நானே உங்களைத் தேடி வருகிறேன். நீங்கள் படப்பிடிப்பு தளத்திற்கெல்லாம் வர வேண்டாம் என்று சொன்னாராம்.

ஏன் அவர் இப்படி சொன்னார்? என குழம்பி நின்றிருந்த சரவணனிடம், என்னை வைத்து நீங்கள் படம் எடுக்கவில்லை என்றால் நீங்கள் வரலாம். ஆனால் அது நடந்தும் விட்டது.

நான் உங்கள் தயாரிப்பில் சரியாக நடிக்காதால் தான் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பதற்கு நடையாக நடந்து கொண்டிருக்கிறார் சரவணன்  என  விமர்சனம் செய்வார்கள் என்றாராம் எம்.ஜி.ஆர். இந்த தகவலை ‘சித்ரா’லட்சுமணன் சொல்லியிருந்தார்.

More in cinema news

To Top