தொலைக்காட்சி சீரியல் மூலமாக தமிழக ரசிகர்களிடம் தனது முகத்தை காட்டி, அதனாலேயே செலிபரட்டியாக மாறியவர் எம்.எஸ்.பாஸ்கர். சீரியலில் இவர் கொடுத்த பெர்ஃபாமென்ஸ் இவரை தமிழ் சினிமாவின் பிரபல காமெடியனாக மாற்றியது. அதன் பின்னர் தான் அதிகமாக நகைச்சுவை கேரக்டரில் இவரை பார்க்க முடிந்தது.
பாடும் திறமையும் கொண்டவர் இவர். கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான “ஆல் இன் ஆல் அழகுராஜா” படத்தில் ‘தில்லானா திவ்யநாதன்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
காஜலுக்கு இவருக்கு டான்ஸ் ஆட கற்றுகொடுக்கும் காட்சிகளில் வந்த இவர், படம் பார்த்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மீது அதிகமான அன்பும், மரியாதையும் கொண்டவாரகவே இருந்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்துள்ள படத்தின் டிரையலரை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து வெளியிட்டு தனது அஞ்சலியை செலுத்தினார். இவரது காரை இவரே தான் ஓட்டுவாராம்.
அது ஏன் என்பதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார் பாஸ்கர். திரை துறையில் இருப்பவர்கள் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. பயணங்கள் போகும் போது மது அருந்திவிட்டு தான் காரில் செல்வார்களாம். நிறைய பேர் டிரைவர் வைத்து கொண்டுள்ளார்களாம்.
கார் ஓட்டும் வேலையை ஓட்டுனர் பார்த்து கொள்ளவார் என்ற தைரியத்தில் அதிகமாக மது குடிக்க தோனுமாம். இதனால் தான் தனது காருக்கு டிரைவரை வைக்க வில்லை என சொன்னார்.
மதுவில் கிடைக்கும் போதையை விட, தனக்கு கார் ஓட்டுவதின் மீது தான் அதிக போதை தனக்கு. அந்த போதைக்கு அவர் அடிமையும் கூடவாம். இதானாலும் தான் அவர் காருக்கு டிரைவர் வைத்து கொள்வதில்லையாம்.