இயக்குனரை நான் மிரட்டவில்லை – நடிகர் கருணாகரன் விளக்கம்

240
Actor karunakaran explain the story

பொதுநலன் கருதி இயக்குனருக்கு கொலை மிரட்டல் விடவில்லை என நடிகர் கருணாகரன் விளக்கம் அளித்தார்.

கடந்த 7ம் தேதி வெளியான படம் ‘பொதுநலன் கருதி’. கந்துவட்டியை மையாமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கருணாகரன், அருண் ஆதிக்,  சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சியோன் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், கருணாகாரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சியோன் புகார் அளித்துள்ளார். படத்தின் புரமோஷன் விழாவிற்கு வராதது குறித்து கருணாகரனிடம் பேசிய போது அவர் தன்னை மிரட்டியதாக அந்த புகார்  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து கருணாகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “படத்தின் இசையீட்டு விழா 4ம் தேதி நடைபெறுவதாக, 1ம் தேதி இரவுதான் எனக்கு அழைப்பு விடுத்தனர். அந்த தேதியில் வேறு சில படங்கள் தொடர்பான பணி இருந்தது. இதை அவர்களிடமே கூறிவிட்டேன். 8ம் தேதிதான் சென்னைக்கே நான் வந்தேன்.  எனவே, புரமோஷனுக்கு நான் வரவில்லை எனக்கூறுவதில் உண்மை இல்லை.  அதேபோல், எனக்கும் கந்துவட்டி காரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அப்படி வளரவும் இல்லை. யாரையும் நான் மிரட்டவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

பாருங்க:  விஜய் ரஜினி ரசிகர்கள் சண்டை! கொலையில் முடிந்த விவாதம்!