நடிகர் கமல்ஹாசனின் கொரொனா கீதம் அறிவும், அன்பும் – யூடியூபில் ட்ரெண்டிங் வீடியோ

304

கொரொனா தாக்கத்தால், இந்தியளவில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3க்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொரொனா தொடர்பான விழிபுணர்வை அனைத்து தரப்பு மக்களும் சமூக ஊடங்களின் மூலம் எற்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இதில் அரசாங்கம் மற்றும் திரைபரபலங்களும் அடங்கும்.

இந்நிலையில், உத்தம வில்லன், பாபனாசம் மற்றும் விஸ்வரூபம் 2 இசையமைப்பாளர் ஜீப்ரான்னுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் இப்போது கொரொனா வைரஸுயில் இருந்து சற்று மக்கள் அமைதியடைய கொரொனா கீதம் (CORONA ANTHEM) என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.

அறிவும், அன்பும் என்று தொடங்கும் பாடலை, நடிகர் கமல்ஹாசனுடன், அனிருத் ரவிச்சந்தர், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபலமான 29 பாடகர்கள் பாடியுள்ளனர். 5 நிமிடம் 15 வினாடிகள் இயங்கும் இந்த பாடல், உலகம் கோவிட் -19 பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், மக்களை அமைதியையும் நல்லறிவையும் புகட்டும் இசை கலைக்கு அழைத்து செல்கின்றது.

கொரொனா கீதம் (corona anthem) அறிவும், அன்பும் – யூடியூபில் ட்ரெண்டிங் வீடியோவாக உள்ளது.

பாருங்க:  மாரியம்மனும் காளியம்மனும் சும்மா விடாது தமிழக பிஜேபி தலைவர் எச்சரிக்கை
Previous articleடி.வி சேனல்களில் ஏப்ரல் 25 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
Next articleஅமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் முட்டாள் தனமானக் கேள்வி! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!