திரையுலக பிரபலங்கள் தங்களது வாரிசுகளை மற்றொரு திரை பிரபலதிற்கோ அல்லது சினிமா சம்பத்தப்பட்டவர்களுடனோ திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கோலிவுட்டில் இருந்துதான் வருகிறது.
அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவிற்கும், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும், தமிழ் திரை உலகின் பிரபல நடிகருமான தனுஷிற்கும் திருமணம் நடந்தது.
“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ், இவரது படங்கள் தமிழ் ரசிகர்களை கவர இன்று இவர் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரது பயணம் ஹாலிவுட் வரை சென்று விட்டது.
“3”படத்தின் மூலம் தமிழில் இயக்குரனாக அறிமுகமானவர். அவர் கடைசியாக ரஜினியை வைத்து “லால் சலாம்” என்ற படத்தை எடுத்துள்ளார். தனது அடுத்த படம் குறித்து யோசித்தும் வருகிறார். தனுஷ்- ஐஸ்வர்யாவிற்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் தம்பதியராக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திடீரென தங்களது திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருவரும் தற்பொழுது வரை பிரிந்து தான் வாழ்கின்றனர். முன்னதாக ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே
தனுஷ் சமீபத்தில் பிரம்மாண்டமாக கட்டி முடித்துள்ள வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு ஐஸ்வர்யாவும், லதா ரஜினிகாந்தும் பங்கேற்றதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இருவருக்கும் உண்மையில் எந்த பிரச்சனையும் கிடையாதாம். சிட்டிவேஷன் காரணமாக அப்படி ஒரு அறிவிப்பை வெளியியட்டார்களாம்.
இருவரும் அடிக்கடி போனில் பேசிவருவதாகவும், வாட்சாப்பில் சாட்டிங் செய்து இருவரும் நெருக்கம் காட்டி வருவதாகவும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விவாகரத்து பற்றிய அறிவிப்பு திரும்பப்பெறலாம், மீண்டும் இவர்கள் இருவரும் கணவன், மனைவியாகவும் வலம் வரலாம் என்றும் பத்திரிக்கையாளர் ஒரு கூறியதாக செய்திகள் வலம் வருகிறது.