Entertainment
பண உதவி கேட்கும் நடிகர் பெஞ்சமின்
நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தவர் நடிகர் பெஞ்சமின். அதில் விஜய்யுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்கி இருப்பார். இது போல் வடிவேலு நடித்த வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலுவை மோசமான வார்த்தைகளால் பேசும் காமெடி காட்சியும் பிரபலம்.
இவர் மாரடைப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லையென்றும் தான் இப்போது சேலத்தை சொந்த ஊராக கொண்ட இவர் சென்னை ஆஸ்பத்திரியில் இருந்து பெங்களூருக்கு செல்ல இருப்பதாகவும் தனது மருத்துவசிகிச்சைக்கு பணம் தரும்படி நண்பர்களையும் சக நடிகர்களையும் இவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
