ஆர்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட மகாமுனி படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே ஆர்யா வெற்றி படத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில், மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார்.
மௌனகுரு திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாந்தகுமர். 8 வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கிய படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் ஒருவழியாக ஆர்யா நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் என யூடியூப்பில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.