Connect with us

ஐம்பத்தினாலு வயசு ஆகிடுச்சா அரவிந்த்சாமிக்கு?…மறக்க முடியுமா கலெக்டர் சார் நீங்க ரொம்ப நல்லவங்க!…

arvind swamy

Latest News

ஐம்பத்தினாலு வயசு ஆகிடுச்சா அரவிந்த்சாமிக்கு?…மறக்க முடியுமா கலெக்டர் சார் நீங்க ரொம்ப நல்லவங்க!…

தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்கள்  பற்றிய லிஸ்ட் எடுத்தால் அதில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அரவிந்த் சாமியாக இருக்கும்.  90ஸ்  காலேஜ் கேர்ள்ஸின் கனவு நாயகன் இவரே தான். “தளபதி”யில் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்டவர். அர்ஜூன் ஐ.ஏ.எஸ். கேரக்டரில் நடித்தார்.

அட்ராஸிட்டி செய்யும் தேவா – சூர்யா இவர்களை அடங்க வைக்கும் கலெக்டர். தனது அண்ணன் சூர்யா ரஜினியை தான் அட்டாக் செய்தோம் என்பது க்ளைமேக்ஸில் தான் அவருக்கே தெரியவரும். சூர்யாவின் நெருங்கிய நண்பன் தேவா மம்மூட்டி கொல்லப்படுவார் படத்தில்.

rajini arvind swamy mammootty

rajini arvind swamy mammootty

அண்ணனின் காதலி சுப்புலட்சுமியாக வந்த ஷோபனாவை மணமுடிப்பார், சூர்யா – சுப்புவின் காதல் கதையை பற்றி தெரியாமலேயே. படத்தில் ரஜினி பேசிய ‘கலெக்டர் சார் நீங்க ரொம்ப நல்லவங்க’, என்றும் மங்காத டயலாக்.

ரோஜா பூவின் அழகும் , “ரோஜா”வின் பெயரை கொண்ட மணிரத்னம் படத்தில் நடித்த இவர், அந்த பூவை போலேவே மென்மையான முக தோற்றத்தோடு கவர்ந்திருப்பார்.

roja

roja

அரவிந்தசாமிக்கு அழகில் அந்த போட்டியாளராக மாறிய அஜீத்குமாருடன் “பாசமலர்கள்” படத்தில் நடித்திருந்தார். “பம்பாய்” படத்தில் அமூல் பேபி போல இருந்திருந்தார் அரவிந்த்சாமி.

அடுத்தடுத்து நடந்த சில சோகமான நிகழ்வுகளால் திரை பயணத்தை தொடர முடியாத நிலை. தனது விடாமுயற்சி யால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து மறுபடியும் சினிமாவில் நடிக்க துவங்கினார் அரவிந்த்சாமி.

ஜெயம் ரவியுடன் “தனி ஒருவன்” படத்தில் அல்ட்ரா மாடர்ன் வில்லன். சித்தார்த் அபிமன்யுவாக அட்டகாசமான ஆக்டிங். படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றிருப்பார்.

ஹீரோ, வில்லன், ஸ்பெஷல் ரோல் என தனது நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் அரவிந்த் சாமியின் 54வது பிறந்த தினம் இன்று.

தனது அழகாலும், அருமையான நடிப்பாலும் சந்தோஷத்தை கொடுத்து வரும் அரவிந்த்சாமிக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையால் நனைய வைத்து அவரை மகிழ்வித்து வந்து கொண்டிருக்கின்றனர்.

More in Latest News

To Top