ஸ்டைலிஷ் ஸ்டார்ரின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

168

தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டீஸர், பாடல் வெளியீடு என்று அனைத்தும் படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ, அப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பிறந்தநாளன்று மிகவும் சர்ப்ரைஸாக சோஷியல் மீடியாவில் வெளியிடுவது வாடிக்கைதான்.

அந்த வகையில், கடந்த மாதம் தெலுங்கு நடிகர் ராம் சரண் பிறந்தநாள் அன்று அவரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ராம்சரண் நடித்த ரோலின் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வகையில் தெலுங்கு நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஆக அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அந்த படக்குழு வெளியிட்டது.

ரங்கஸ்தலம் இயக்குனர் சுகுமார் அடுத்து இயக்கும் படம்தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிக்க டிஎஸ்பி தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

#Pushpa
#Pushpaallu
First Look and the Title of my next movie “ P U S H P A “ . Directed by dearest Sukumar garu . Music by dearest friend

. Really excited about this one. Hoping all of you like it .

#MuttamsettyMedia

144 கொரொனா தடை உத்தரவால் படப்பிடிப்புகள் நடக்கவிட்டாலும், இவ்வாறான அப்டேட்டால் தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உரைந்துள்ளனர், அதோடு மட்டுமல்லாமல் #புஷ்பா #pushpa என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் வைரலாகியுள்ளது.

பாருங்க:  தொலைக்காட்சி சேனல்களில் ஏப்ரல்17 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!