cinema news
அஜீத் இல்லேன்னா அருண்விஜய் இல்லையாம்!…விட்டுக்கொடுக்காத விஜயகுமார்…அப்படி என்னதான் நடந்துச்சோ?…
குணச்சித்திர நடிகர்களில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருபவர் விஜயகுமார். இவரது குடும்பமே கலைத்துறையோடு அதிக தொடர்புடையது. இவரது வாரிசுகளான வனிதா, கவிதா, ஸ்ரீதேவி ஆகியோர் தமிழ்படங்களில் கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள்.
விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா, எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர்.
இவர்களது மகன் அருண்குமார் “ப்ரியம்” படத்தின் மூலம் தமிழ் சினிமவில் காலடி எடுத்து வைத்தார்.
விஜயகுமாருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு அருண் குமாருக்கு கிடைக்க வில்லை என்றாலும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து கொண்டிருந்தார். அருண் விஜயாக தனது பெயரை மாற்றிக்கொண்டு தற்பொழுது நடித்து வருகிறார்.
கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வில்லனாக நடித்தார் அருண்விஜய். இந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்ததாக சொல்லப்பட்டது.
விக்டராக படத்தில் வந்திருந்த இவருக்கு அஜீத்ற்கு இணையான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. தனக்காக அருண்விஜய் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டாம் என்றும்,
உங்களது விருப்பபடியே இயக்குங்கள்,என் தலையீடு இருக்காது என அஜீத் சொல்லியதாலே தான் அருண் விஜய்க்கு பெயர் கிடைத்தது.
எந்த ஒரு மாஸ் நடிகரும் வளர்ந்து வரும் நடிகருக்கு இப்படி ஒரு அங்கீகாரத்தை வழங்க மாட்டார்கள். ஆனால் அந்த விஷயத்தில் அஜீத்குமார் மாறுபட்டிருந்தார் என அருண் விஜயின் தந்தையான விஜயகுமார் சொல்லியிருந்தார்.
அஜீத்துடன்”வில்லன்”, “ஜி”, “ஆனந்த பூங்காற்றே”, “நீ வருவாய் என” படங்களில் நடித்துள்ளார் விஜயகுமார்.