Connect with us

இரண்டு விரல்களை காட்டிய அஜீத்!… விஜய்க்கு போட்டியாக வந்துட்டா ஆசை?…

ajith vijay

cinema news

இரண்டு விரல்களை காட்டிய அஜீத்!… விஜய்க்கு போட்டியாக வந்துட்டா ஆசை?…

தனது தொடர் உழைப்பால், விடாமுயற்சியால், தன்னம்பிக்கையால் இன்று தமிழ் திரை உலகை கலக்கி வரும் கதாநாயகர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் அஜீத் குமார்.

ஆரம்பத்தில் ராசி இல்லாத நடிகராக பார்க்கப்பட்டவர் அஜித். இவருக்கும் சர்ச்சைகளுக்கும் எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. பட ப்ரமோ நிகழ்ச்சிகளில், ஆடியோ வெளியீட்டு விழாக்களில், பொது நிகழ்ச்சிகளில் தலையை காட்டாமல் இருந்து வருகிறார் அஜீத்.

இது கூட இவருக்கு பலமுறை எதிர்மறையான விமர்சனங்களை இவர் மீது விழ வைத்திருக்கிறது. ஏராளமான ஆபரேஷன்கள், எழுந்து நடமாட முடியாத நிலை இவை எல்லாவற்றையும் கடந்து தலைநிமிர்ந்து நிற்பவர் இவர்.

“விடாமுயற்சி” படத்தை பற்றி எந்த தகவலும் வராத நிலையில் அவரது அடுத்த படமான “குட் பேட் அக்லி” குறித்த அறிவிப்பு வெளிவந்தது. ஒருபக்கம் இவரது ரசிகர்களுக்கு இது மகிழ்வை தந்தாலும் ஒரு புறம் கவலையயும் தந்தது.

பெயர் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஓராண்டு நெருங்கப்போகும் நிலையில் விடாமுயற்சி பற்றிய அப்டேட் வராதது குறித்த தங்களது வருத்தத்தை பல விதமாக வெளிப்படுத்தி வந்த வண்ணமே உள்ளனர்.

ajith

ajith

இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாயை சம்பளமாக வாங்க வேண்டும் என தீர்மானித்துள்ளாராம் அஜீத். அதிக சம்பளம் வாங்கும் நாயகர்கள் பட்டியலில் இருப்பவர் விஜய்.

இனி தன்னை நோக்கி வரும் தயாரிப்பாளர்களிடம் படத்திற்கான சம்பளம் எவ்வளவு என்று கேட்டால் இரட்டை விரல்களை காட்டி தெரியப்படுத்த உள்ளார் அஜீத்குமார் என ‘வலைப்பேச்சு’ அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

More in cinema news

To Top