அஜித்துக்கு ஃபெராரி கொடுத்த கௌரவம்… என்னன்னு தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!

அஜித்துக்கு ஃபெராரி கொடுத்த கௌரவம்… என்னன்னு தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!

நடிகர் அஜித் குமாருக்கு ஃபெராரி நிறுவனம் ஃபெராரி கையுறைகள் வழங்கி கௌரவித்திருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டும் இல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தனது பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்று விடுவார். கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் அஜித் குமாரை கௌரவிக்கும் விதமாக அவருக்கு ஃபெராரி கையுறைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமார் இதனை பெற்றுக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட்அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

விடாமுயற்சி திரைப்படம் தான் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். மேலும் அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் அஜித் குமார் பெராரி கையுறைகள் வாங்கிக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/Flicks_rithick/status/1838858748397334609