Latest News
ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயம்… பங்கேற்க போகும் அஜித்… குஷியில் தல ரசிகர்கள்…!
ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிப்பு மட்டும் இல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். இது நம் அனைவருக்கும் தெரியும். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வபோது தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் எடுத்துக் கொண்டு சுற்றுலா சென்று விடுவார். பைக் ரேசிங் என்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.
பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களமிறங்க போகிறார். தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா சார்பில் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள யூரோ ஐபிஎல் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேசிங் அஜித் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கின்றார் என்ற தகவல் இணையதள பக்கங்களில் தீயாக பரவி வருகின்றது.
தற்போது அஜித் குமார் ரேசிங் என்ற புதிய கார் பந்தய அணியை தொடங்கியுள்ள நிலையில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர ரேஸிங் ஓட்டுனராக செயல்படுவார் எனவும் ஐரோப்பியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 99 GT3 கப் பிரிவில் ‘அஜித்குமார் ரேஸிங்’ எனவும் தெரிவித்திருக்கின்றார்.
அஜித் இதற்கு முன் நடந்த தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா த்ரீ சாம்பியன்ஷிப் ஆசியா ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போன்ற ரேசிங் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.