cinema news
கேஎஸ்ரவிக்குமாரை அப்படியே காப்பி அடித்த அஜித்!…அதுக்காக நடைய கூடவா?….
“காதல் புத்தகம்” படத்தில் அறிமுகமாகி “அமராவதி”யின் மூலம் சிறிது பிரபலமாகி “ஆசை” நாயகனாக வலம் வந்து “காதல் மன்னன்”ஆக மாறியவர் அஜீத்…
தனக்கு வந்த பிரச்சனைகளை “துணிவு” கொண்டு எதிர்த்து நின்றார். தனது நடிப்புத்தொழிலின் மீது அதிக “விஸ்வாசம்” கொண்டவராக இருக்கிறார்.
சினிமாத்துறையில் தன்னை ஏளனமாக பார்த்தவர்களுக்கு தனது வெற்றிகளால் “வில்லன்”ஆக மாறினார். இப்படிதான் இவரது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்,
சாக்லேட் பாயாக பார்க்கப்பட்ட அஜித்குமார் ஆக்சன் படங்களில் நடிக்க துவங்கினார். இதன் மூலம் அவரின் ரசிகர் பலம் அதிகரிக்க துவங்கியது.
தமிழ் திரை உலகின் தலையாக நிமிர்ந்து நின்றார் அஜீத். வெற்றியும், தோல்வியும் இவரை மாறி, மாறி சுற்றி வரத்துவங்கியது.
அதிகமான வெற்றிகளை பார்த்தவன் இல்லை, நான் அதிகமான தோல்விகளை பார்த்தவன் என அவரே சொல்லும் படியாகத்தான் இருந்தது அவரது திரை பயணம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் “வரலாறு” படத்தில் மூன்று வேடத்தில் நடித்திருப்பார். மூன்று வேடங்களிலுமே கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அஜீத்குமார்.
அதில் வரும் பெண் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகுந்த சிரமம் அடைந்தாராம். அந்த காட்சி பற்றி விளக்கும் போது நளினமான நடையை நடந்து காட்டுவாரம் ரவிக்குமார்.
நீலாம்பரி என சொன்னால் நிமிர்ந்து நிற்க வேண்டும், ரஜினி என்று சொன்னால் ஸ்டைலாக முகத்தை திருப்பவேண்டும். இவையெல்லாம் காட்சி படப்பிடிப்பின் போது அஜீத்ற்கு கொடுக்கப்படும் “க்ளூ”வாம். அப்படியே உள்வாங்கி கொண்டு நடித்தாராம்.
இவ்வளவு பெரிய நடிகர் இது போன்ற ஒரு கேரக்டரை ஏற்று ந நடிப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் துணிச்சலாக அதனை செய்து முடித்தார் அஜீத் என ரவிக்குமார் கூறியிருந்தார்.