cinema news
இல்ல இல்ல நான் தான் ஃபர்ஸ்டு…வெற்றி மாலை சூட்டிய ஆதி?…
ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள “பி.டி.சார்” படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசிரி கணேசனுக்கு மலர் மாலை அணிவிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
அமைதியான பையன் ஆதி தியாகராஜனின் பள்ளிக்கூடத்தில் பி.டி.வாத்தியாராக சேருகிறார். மாணவ மாணவியரின் அன்பை பெற்ற ஆசிரியராக மாறுகிறார். இப்படி கலகலப்பாக துவங்குகிறது படம். அதன் பிறகே மிகப்பெரிய திருப்பத்தை நோக்கி செல்கிறது ஆதியின் வாழ்க்கை படத்தில்.
மாணவி அனிகாவிற்கு நேர்ந்த கொடுமையை கண்டு பொங்கி எழுகிறார் ஹீரோ. இது தான் படத்தின் கதை. படத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திய ஆதி பாராட்டுக்களை பெற்றிருந்தார். கார்த்திக் வேணுகோபால் படத்தை இயக்கியிருந்தார்.
பெண் அடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்று புள்ளி வைக்க சொல்லும் விதமான கதைக்கருவை கொண்டு வெளிவந்திருந்தது பி.டி.சார் படம். அந்த வகையில் இயக்குனர் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
சில காலமாக சினிமாவை சற்றே விலகியிருந்த ஆதி பி.டி.சார் படத்தின் மூலம் தனது கேரியரை வலுப்படுத்தியுள்ளார். 2கே கிட்ஸ்ன் அபிமான நடிகர்களில் ஒருவரான் ஆதி படத்தில் குறைகள் இருந்தாலும் தனது நடிப்பால் அவற்றை எல்லாம் மறக்கடிக்கச்செய்திருந்தார்.
படத்தின் வசூல் நினைத்தது போலவே இருந்தது என சொல்லவைக்கும் விதமாக படத்தின் நாயகன் ஆதியும், இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலும் தயாரிப்பாளர் வேல்ஸ் இன்டர் நேஷனல் ஐசிரி கணேசனை சந்தித்து மலர் மாலை அணிவித்து படத்தினுடைய வெற்றிக்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், கணேசனின் ஆசிகளையும் பெற்றுள்ளனர். இவர்கள் சந்திப்பு குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.