---Advertisement---

அப்பா சொல்றத கேளு!…மகளுக்கு க்ளாஸ் எடுத்த அர்ஜூன்?…தந்தையர் தினம்ல இன்னைக்கு…

Published on: June 16, 2024
arjun aishwarya
---Advertisement---

 

உலகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. நிறைய பேரோட வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டா பக்கம் எல்லாத்திலேயும் பார்த்தால் அப்பாக்கள் பத்தின அப்-லோட்கள் தான் ஜாஸ்தி. எல்லா பிள்ளைகளுக்கும் தங்களோட அப்பா தானே முதல் ஹீரோ. அதனால கூட கொண்டாட்டங்கள் இன்னும் அதிகமாக கலை கட்டுது.

ஆக்ஸன் கிங் அர்ஜூன், காமெடி நடிகர் தம்பி ராமையா இவர்கள் இரண்டு பேரும் சமீபத்தில் சம்மந்தியாக மாறினர். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, ராமையா மகன் உமாபதி திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. மணமக்களின் போட்டோக்கள் வைலரலா பரவியது வலைதளங்கள்ல.

aishwarya umapathy
aishwarya umapathy

இந்த நேரத்தில் தம்பதி சகீதமாக செய்தியாளர்களை சந்தித்தனர் இந்த திரை பிரபலங்களின் வாரிசுகள். ஐஸ்வர்யா அர்ஜூன் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தனது கணவர் உமாபதி தனக்கு நல்ல நண்பர் என்றும், தன்னை பற்றிய புரிதல் அதிகம் உள்ளவர் என்றும் சொன்னார்.

பேட்டியின் போது அர்ஜூன், தம்பி ராமையாவும் உடனிருந்தனர். ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டு வந்த போது தம்பி ராமையா சாருக்கும் நன்றி என சொன்னார்  ஐஸ்வர்யா.

பக்கத்திலிருந்த அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, சார் இல்லை மாமனார் என சொன்னார். என்ன தான் திருமணம் முடிந்திருந்தாலும் தன் மகளை சரியாக வழிநடத்தி, கற்றுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் நல்லதொரு ஆசிரியராகவும் இருந்து வருவதை நிருபித்து விட்டார்.

தொடந்து பேசிய தம்பி ராமையா அர்ஜூன் குடும்பத்துடன் திருமண சம்மந்தம் வைப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என சொன்னார்.

পড়তে ভুলবেন না