cinema news
+2பொது தேர்வில் சாதனை படைத்த சூர்யா ஜோதிகா மகள்…கொண்டாடிவரும் குடும்பம்…..
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியாக தேர்வு எழுதிய மாணவ மாணவியர் ஆர்வமாக எவ்வளவு மதிப்பெண் வாங்கி இருக்கிறோம் என பார்த்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கோடம்பாக்கத்தின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது தமிழ் சினிமா பிரியர்களுக்கு.
செலிபிரடீஸின் வாரிசகள் யார் யாரெல்லாம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள் என ஆராயப்பட்டது. “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “மாயாவி”, “சில்லுன்னு ஒரு காதல்” படங்களில் நடித்து, ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக காதலித்து பின்னர் மணமுடித்து தம்பதியராக வெற்றி நடை போட்டு வரும் சூர்யா, ஜோதிகாவின் மகளான தியா பொதுதேர்வு எழுதியிருந்தார்.
கல்விதான் முக்கியம் அதிகமான பாடசாலைகளை கட்டுங்கள் என மேடைகளில் தொடர்ச்சியாக பேசியவர் ஜோதிகா. சூர்யாவும் தனது அறக்கட்டளையின் மூலம் கல்விக்கு நன்கொடைகள் அளித்து வருவது நாம் அறிந்ததே. பல ஏழை மாணவ , மாணவியரின் கனவுகளை நினைவாக்க தன்னால் அவர்களின் கல்விக்கு முடித்த அளவு உதவி செய்து வருகிறார் சூர்யா.
சமீபத்தில் உங்களது குழந்தைகள் பிள்ளைகள் சினிமாவிற்கு நடிக்க வருவார்களா? என ஜோதிகாவிடம் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, படிப்பின் மீது தான் அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. படிப்பது மட்டுமே தற்போது அவர்களது வேலை என பதில் அளித்து இருந்தார் ஜோதிகா. சூர்யா – ஜோதிகா தம்பதியரின் மகளான தியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார்
தனது தாயின் சொல்லை அப்படியே காப்பாற்றும் வண்ணம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளார் தியா. தமிழ் மொழியில் 100க்கு 96, ஆங்கிலத்தில் 97, கணக்கில் 94, பிசிக்ஸில் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 என மார்க் வாங்கியுள்ளாராம். இவரின் மொத்த மதிப்பு 600க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தியாவின் இந்த சிறப்பான சாதனையை குடும்பமே மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றதாம்.