அதிதி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது உண்மை – அபி சரவணன் பேட்டி

314
Abi saravanan want to live with adithi menon

நடிகை அதிதி மேனனும் தானும் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டது உண்மை என அபி சரவணன் தெரிவித்துள்ளார்.

‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அபிசரவணன். இவர் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவரும், பட்டதாரி படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை அதிதி மேனனும் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

அதைத் தொடர்ந்து, நடிகை அதிதி மேனன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சரவணனுக்கு எதிராக ஒரு புகார் அளித்தார். அதில், பட்டதாரி படத்தில் நடித்தபோது நானும் சரவணனும் காதலித்தோம். அப்போது பதிவு திருமணம் செய்வதாக கூறி விண்ணப்பத்தில்  கையெழுத்து வாங்கினார். ஆனால், அவரின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடனான காதலையும் முறித்துக்கொண்டேன். அவரை நான் கடத்தவும் இல்லை. ஆனால், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல் போலி ஆவணங்களை தயார் செய்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அபி சரவணன் “ நானும் அதிதியும் 2016ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டேன். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது. 3 வருடங்கள் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். ஒருநாள் நான் வெளியூரில் இருந்த வீட்டில் இருந்த பீரோ, சூட்கேஸ்களை உடைத்து அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு அதிதி என்னை விட்டு சென்றுவிட்டார். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

பாருங்க:  ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் யார்? - இதோ அவரே சொல்கிறார்!

அப்போதுதான், அதிதியுடன் சமரசம் செய்து வைப்பதாக கூறி ஒரு கும்பல் என்னை காரில் அழைத்து சென்று, வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியது. இப்போதும் அதிதியுடன் வாழ நான் தயாராக இருக்கிறேன். அதிதி தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார்.