ஆர்யா – சாயிஷா ஜோடிக்கு வாழ்த்து கூறிய அபர்ணதி…

731

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எப்படியாவது ஆர்யாவின் மனதில் இடம் பெற்று அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என போராடியவர் அபர்ணதி.

அபர்ணதியையே ஆர்யா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர். ஆர்யா அவருக்கு இல்லை என்று ஆன போது கண்ணீர் விட்டு கதறி அந்நிகழ்ச்சியை பார்த்த பலரின் அனுதாபத்தையும் பெற்றார். அவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது. தற்போது கூட போட்டி கொடுக்கும் போது ஆர்யாவுக்கு தன்னைத்தான் பிடிக்கும் எனவும், தற்போதும் அவரை காதலித்து வருவதாக அபர்ணதி கூறி வருகிறார்.

ஆர்யா, சாயிஷா இருவரும் காதல் கொண்டுள்ளனர் என செய்திகள் வெளியான போதுகூட “ஆர்யாவோ, சாயிஷாவோ இதுவரை தங்கள் திருமணத்தை உறுதி செய்யவில்லை. எனவே இந்த செய்தி வெறும் வதந்தியாக இருக்கவே 99 சதவீதம் வாய்ப்புண்டு” என தெரிவித்தார். ஆனால், தற்போது அதை ஆர்யா உறுதி செய்து விட்டார். மேலும், வருகிற மார்ச் மாதம் தனக்கும், சாயிஷாவுக்கும் திருமணம் எனவும் கூறிவிட்டார்.

இந்நிலையில், அபர்ணதி தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆர்யாவுக்கும், ஆயிஷாவுக்கும் வாழ்த்துக்கள்” என டிவிட் செய்துள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பாருங்க:  2019 ஆஸ்கார் விருதுகள் - ஒரு பார்வை!