96 - விஜய்சேதுபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

96 பட இயக்குனருக்கு விஜய்சேதுபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

96 பட இயக்குனர் பிரேமுக்கு நடிகர் விஜய் சேதுபதி புல்லட்டை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவான 96 படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக 80களில் பிறந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. அதற்கு காரணம் அப்படத்தில் இயக்குனர் பிரேம்குமார் காதலை கையாண்ட விதம். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பு பலருக்கும் பிடித்தது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் பிரேமுக்கு விஜய் சேதுபதி புல்லட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். 3 லட்சம் மதிப்புள்ள அந்த புல்லட் மணிக்கு 170 கிலோ மிட்டர் வேகம் செல்லும் திறன் கொண்டது.  அதோடு, 0096 என்ற பதிவெண்ணையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.