96 தெலுங்கு ரீமேக் உருவாதில் சிக்கல்!

433

96 தெலுங்கு ரீமேக் உருவாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் 96. இப்படத்தை பிரேம் என்பவர் இயக்கியிருந்தார். தமிழ் ரசிகர்களிடையே இப்படம் பலத்தை வரவேற்பை பெற்றதால் நல்ல வசூலை பெற்றது. எனவே, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இதில், சர்வானந்த், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தெலுங்கிலும் பிரேமே இயக்குகிறார். 96 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசை. தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்க வேண்டும் என பிரேம் விரும்புகிறாராராம். ஆனால், தயாரிப்பு தரப்போ தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் என கருதுகிறதாம்.

எனவே, இது தொடர்பாக இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்புக்கிடையே மோதல் எழுந்துள்ளது. விரைவில் இயக்குனர் மாற்றப்படலாம் என செய்தி கசிந்துள்ளது.

பாருங்க:  இணையத்தில் வைரலாகும் மிஸ்டர் லோக்கல் பாடல் வீடியோ...