31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை

31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை

ரஜினி நடித்த படங்களில் பல படங்களில் ஆண் வில்லனுடன் தான் மோதி இருப்பார்.அவர் பெண் வில்லனுடன் மோதிய படங்கள் இரண்டு படங்கள் , மாப்பிள்ளை, மற்றும் படையப்பா இரண்டு படங்களே அதில் முதலில் வந்த படம் மாப்பிள்ளை கடந்த 1989ல் தீபாவளியன்று வந்த இந்த திரைப்படம் அக்டோபர் 28ல் வெளியானது தீபாவளி அக்டோபர் 29 தான் என்றாலும் ரசிகர்களுக்காக ஒரு நாள் முன்னதாகவே இப்படங்கள் வெளியானது. மாப்பிள்ளையுடன் கமல் நடித்த வெற்றிவிழா, சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டு பிள்ளை, திராவிடன், விஜயகாந்த் நடித்த ராஜநடை படங்கள் வெளியாகினாலும் ரஜினியின் இப்படமே மாஸ் வெற்றியை பெற்றது.

அதற்கு காரணம் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவு மிக சிறப்பான  மாஸான ஸ்டைல் லுக்கில் ரஜினி இருந்ததும், பெண் வில்லியான ஸ்ரீவித்யாவுடன் ரஜினி வசனம் பேசிக்கொண்டு மோதும் காட்சிகளால் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றன.

அந்த நேரத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இயக்கினார் ரஜினியை வைத்து இயக்கிய தர்மதுரை படத்துக்கு சில காலங்களுக்கு பின் அவர் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இளையராஜா இசையமைத்த மானின் இரு கண்கள் கொண்ட,என்னோட ராசி நல்ல ராசி, உனைத்தான் நித்தம் நித்தம்,வேறு வேலை உனக்கு இல்லையே , என்னதான் சுகமோ போன்ற பாடல்கள் வரவேற்பை பெற்றன.

ரஜினிக்கு மாஸ் அண்ட் க்ளாஸ் ஆன இப்படத்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தயாரித்து ஒரு காட்சியிலும் நடித்திருந்தார்.

ரஜினி, அமலா, ஸ்ரீவித்யா,திலீப், நிழல்கள் ரவி, வினுச்சக்கரவர்த்தி, உள்ளிட்டோர் நடித்த இப்படம் 100 நாட்களை கடந்து வெற்றி விழாவை கண்டது ரசிகர்களால் அதிகம் ரசித்து பார்க்கப்பட்டது.