215 அடி உயர கட் அவுட் – விஜய், அஜித் ரசிகர்களை ஓவர்டேக் செய்த சூர்யா ரசிகர்கள்

239
215 அடி உயர கட் அவுட் - விஜய், அஜித் ரசிகர்களை ஓவர்டேக் செய்த சூர்யா ரசிகர்கள்

என்.ஜி.கே. திரைப்படத்திற்காக சூர்யா ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு 215 அடி உயர் கட் அவுட் வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா  நடித்துள்ள திரைப்படம். இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய்பல்லவி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த கால அரசியலை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.  எனவே, சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

215 அடி உயர கட் அவுட் - விஜய், அஜித் ரசிகர்களை ஓவர்டேக் செய்த சூர்யா ரசிகர்கள் 01

இந்நிலையில், இப்படத்திற்காக இதுவரை தமிழ் சினிமா நடிகர்கள் யாருக்கும் வைக்காத அளவுக்கு 215 அடி உயர கட் அவுட்டை சூர்யா ரசிகர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் வைத்துள்ளனர். இதற்கான விழா நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

பாருங்க:  நடிகை சினேகா வீட்டில் விசேஷம் - மகிழ்ச்சி செய்தி தெரியுமா?