அதர்வா போலிஸாக நடித்திருக்கும் ‘100’ பட டீசர் வெளியாகி உள்ளது. சாம் ஆன்டன் இப்படத்தை இயக்கி உள்ளார். சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஷ்ரி என்டர்ப்ரைசர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, எரும சானி விஜய் மற்றும் ஹரிஜா நடித்துள்ளனர்.
பெண்களை ஏமாற்றி பாலியல் துன்பம் கொடுத்த வழக்கை விசாரிக்கும் கதையாக இருக்கும் என தெரிகிறது.
இந்த டீசரில், அதர்வாவின் “பொண்ணுங்க மேல கை வெச்சாலே ஒவ்வொருத்தனுக்கும் செத்துருவோம்னு பயம் வரனும் சார்” என்னும் வசனம் தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பிரச்சனைகளை பேசும் வகையில் அமைந்துள்ளது. மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்க படுகிறது.
100 | Official Teaser | Atharvaa | Hansika Motwani | Sam Anton | Sam CS | Kaviya Venugopal | Auraa