ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் விவேக்!

363

ராஜேஷ் இயக்கிய Mr. லோக்கல் படப்பிடிப்பின் வேலைகள் முடிந்த நிலையில், தற்போது மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் கவனம் செலுத்தி வரார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். இவர்களோடு தற்போது நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

விவேக் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் முதல் படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹீரோ’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கவுள்ள படம், விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படம் மற்றும் ராம்குமார் இயக்கிவரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.

பாருங்க:  குஷ்பு மிகவும் நேசிக்கும் படமாம் இது- காரணம் என்ன