Connect with us

ஹீரோவாகிறார் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்!

ஹீரோவாகிறார் 'லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்!

cinema news

ஹீரோவாகிறார் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்!

பிரபல ஜவுளிகடையான சரவணா ஸ்டோர்ஸ், தி.நகர், குரோம்பேட்டை, போரூர், அண்ணா நகர் மற்றும் மதுரை, திருநல்வேலி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களில் பிரபலமாகி வந்தது.

சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரம், பல நடிகர்களை வைத்து எடுத்த போதும், தற்போது அந்த கடை விளம்பரங்களில், அவரே நடித்து வந்தார், அவருடன் ஹன்சிகா மற்றும் தமன்னா போன்ற நடிகைகளுடன் நடித்து வந்தார். இதனால் பல விமர்சனங்கள் எழுந்தன.

இருந்த போதும் நம்பிக்கையை விடாமல், தொடர்ந்து பல விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன்பின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘உங்களுக்கு பட வாய்ப்பு வந்தால் நடிப்பீங்களா ?’ என்று கேட்ட போது, தனக்கு ஏற்ற கதை அமைந்தால், தாராளமாக நடிப்பேன் என கூறினார்.

தற்போது, படத்தில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 2020ல் அவருக்கு பிடிக்கும் கதையில் நடிக்க முடிவு செய்துள்ளார்.ஆனால், தற்போதே அதற்கான கதைகளை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in cinema news

To Top