ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'பேய் மாமா' ஆகிறார் வடிவேலு

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ ஆகிறார் வடிவேலு

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு ‘பேய் மாமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
வைகை புயல் வடிவேலு, கடந்த 2015 ஆம் ஆண்டு எலி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார், இருந்தும் அந்த படங்களில் அவரது காமெடி எடுபடவில்லை.பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, ஏமாற்றமாகவே மிச்சம்!

பின் சிம்புதேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’யில் நடிக்க இருந்தார்.
இப்படத்தை இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருந்த நிலையில் பல பிரச்சனைகள் காரணமாக வடிவேலு அதில் ஆர்வம் காட்வில்லை என தெரியப்படுகிறது.அதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலுவை வைத்து படம் இயக்க கூடாது என்று வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ திரைப்படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.இதனை படக்குழுவும் அதிகாரபூர்வமாக அறிவித்து, படப்பிடிப்பு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.