விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்தில் வசனம் எழுதும் விஜய் சேதுபதி!

409

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி வசனம் எழுதுகிறார்.

விக்ராந்த் நடித்து, அவர் சகோதரன் சஞ்ஜீவ், இயக்கி வெளியான படம் ‘தாக்க தாக்க’. அப்படத்தில் விஜய் சேதுபதி வசனம் எழுதியிருந்தார். ஆனால் அந்த படம் பெரிதும் சோபிக்கவில்லை.மீண்டும் அவர் சகோதரர் சஞ்ஜீவ் விஷ்ணு விஷால், விக்ராந்த்தை வைத்து இயக்கவுள்ளார்.. மீண்டும் அதற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதவுள்ளார்.ஏற்கெனவே ‘ஆராஞ் மிட்டாய்’ படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ராந்த் உடன் சேர்ந்து நடிப்பதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார் விஷ்ணு விஷால்.மேலும், ‘வெண்ணிலா கபடி குழு 2’, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’, ‘பக்ரீத்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ராந்த்.
விஷ்ணு விஷால் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.

பாருங்க:  க/பெ ரணசிங்கத்துக்கு சூர்யா பாராட்டு- நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ்