விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைப்பெற்றது.

408

நடிகர் விஷால் மற்றும் அனிஷா என்ற நடிகைக்கும் இன்று ஹைதரபாத்தில் கோலாகலமாக திருமண நிச்சியதார்த்த விழா நடைப்பெற்றது.அனிஷா தெலுங்கு படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர். ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபரின் மகள் அனிஷா ரெட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்த விழா இன்று முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தங்கள் திருமணம் நடைபெறும் என விஷால் அறிவித்தார். நடிகர் சங்க கட்டடம் கட்டிக் கொண்டு வரும் நிலையில், இன்னும் சிறு கட்டிட வேலையே பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், மணப்பெண் யார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பேஜில் விஷாலுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார் அனிஷா. ஜனவரி 15ம் தேதி விஷாலுடனான திருமணத்தை உறுதி செய்தார்.

ஹைதராபாத்தில் நடந்த நிச்சியதார்த்த விழாவில் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும், சமுக வலைத்தலங்களில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
எனினும், திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிகிறது.

பாருங்க:  குணா படத்தின் 29ம் ஆண்டு விழா