வில்லனாக களமிறங்குகிறார் வெங்கட்பிரபு!

281

வைபவ் நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் வெங்கட் பிரபு. ஜெயம் ராஜாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஜி. சார்லஸ் இந்த படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக களமிறங்குகிறார்.

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ , ‘சென்னை 28’ போன்ற படங்களில் குணச்சத்திர வேடங்களில் நடித்தவர் நிதின் சத்யா.ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். ‘ஷ்வேத் நிதின் சத்யா’ என்ற நிறுவனம் மூலம் இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்க உள்ளார்.இப்படத்தில், வைபவ்விற்கு ஜோடியாக சின்னதிரை பிரபலம் வாணி போஜன் நடிக்கவுள்ளார். இதுவே அவரது முதல் வெள்ளித்திரை படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி என பலரும் நடிக்கவுள்ளனர். ‘பிசாசு’ , ‘சவரகத்தி’ போன்ற படங்களில் இசையமைத்த அரோல் கரோலி இப்படத்தில் இசையமைக்கிறார்.இந்நிலையில், வெங்கட் பிரபு காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாருங்க:  கர்ணன் படத்தலைப்பை பயன்படுத்த எதிர்க்கும் சிவாஜி ரசிகர்கள்