விபத்தில் சிக்கிய நடிகையின் கணவர் – படுகாயத்துடன் அனுமதி

324
நடிகை வினோதினி

சென்னையில் மோட்டார் சைக்கிள் வாகன விபத்தில் சிக்கிய நடிகை வினோதினியின் கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வண்ண வண்ணப் பூக்கள் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் வினோதினி. திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்த பின் சின்னத்திரைக்கு சென்று பல தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக கிரேஷி மோகனின் தொடர்களில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

இவரது கணவர் வெங்கட் ஸ்ரீதர்(52) பில்டிங் காண்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவர் நேற்று சென்னை திருவான்மியூரில் இருந்து அண்ணாசதுக்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் அமைந்துள்ள கிரீன் வேஸ் சாலையில் அவர் வந்தபோது, எதிரே வந்த வாகனம் மீது அவரது பைக் மோதியது. இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து பற்றி அடையாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த விபத்தில் வினோதியின் கணவர் வெங்கட் ஸ்ரீதருக்கு இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாருங்க:  ஆர்யா - சாயிஷா காதல் ஜோடிக்கு மார்ச் மாதம் திருமணம்