அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படம் சேட்டிலைட் உரிமை தொகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராப், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் சேட்டிலைட் உரிமை தொகையில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜயின் சர்கார் திரைப்படத்தை ஜீ தொலைக்காட்சி ரூ.19 கோடிக்கு வாங்கியது. தற்போது விஜய் 63 சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி ரூ.29 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போனதில்லை. எனவே, தமிழ் சினிமா உலகில் இந்த விவகாரம் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.