விஜய் படத்தில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்

388

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.

விஜயை வைத்து தெறி, மெர்சல் என 2 படங்களை இயக்கிய அட்லி, தற்போது மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுவென நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வுள்ளார்.  மேலும், விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  சிரிக்க மாட்டீங்களா? - பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்த ரோபோ சங்கர்